Google Hotel Center

சேவை விதிமுறைகள்

 

Google LLC (“Google”) மற்றும் இந்த விதிமுறைகளைச் செயல்படுத்தும் அல்லது இந்த விதிமுறைகளை டிஜிட்டல் முறையில் ஏற்கும் தரப்புக்கு (“பயணக் கூட்டாளர்”) இடையே இந்த 'Google Hotel Center' சேவை விதிமுறைகள் (“விதிமுறைகள்”) ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.  பயணக் கூட்டாளரின் 'Google Hotel Center' உபயோகத்தை இந்த விதிமுறைகள் நிர்வகிக்கின்றன. இதில் (i) பயணக் கூட்டாளருக்கு இந்த விதிமுறைகளின்படி வழங்கப்பட்டுள்ள கணக்குகள் மூலம் அணுகக்கூடிய (“கணக்குகள்”) அல்லது (ii) இந்த விதிமுறைகளை மேற்கோள் காட்டுகின்ற (ஒட்டுமொத்தமாக, “Hotel Center”) தொடர்புடைய சேவைகள், அம்சங்கள், செயல்பாடுகள் (“சேவைகள்") ஆகியவையும் அடங்கும்.  

 

1. Hotel Centerரைப் பயன்படுத்துதல்.  தரவு, ஊட்டங்கள் அல்லது பிற உள்ளடக்கத்தை (“உள்ளடக்கம்”) Google APIs உள்ளிட்ட பல்வேறு முறைகளில் Hotel Centerருக்குப் பயணக் கூட்டாளர் சமர்ப்பிக்கலாம். பயணக் கூட்டாளருக்கு Google வழங்கியுள்ள வழிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் இணங்கும் வகையில் உள்ளடக்கத்தைச் சமர்ப்பிக்க பயணக் கூட்டாளர் ஒப்புக்கொள்கிறார். பயணக் கூட்டாளர், Hotel Centerருக்கு உள்ளடக்கத்தை ஏற்றவும் இணைக்கவும் மாற்றவும் அல்லது Hotel Centerரில் உள்ள உள்ளடக்கத்தைப் பிற Google சேவைகளில் பயன்படுத்தவும் தேவையான வசதியை Google வழங்கக்கூடும். அவ்வாறு வழங்கினால் பயணக் கூட்டாளர் பிற Google சேவைகளைப் பயன்படுத்தும்போது அவற்றின் விதிமுறைகளும் நிபந்தனைகளும் பொருந்தும். அதேசமயம் பயணக் கூட்டாளரின் Hotel Center உபயோகமும் இந்த விதிமுறைகளால் தொடர்ந்து நிர்வகிக்கப்படும். குறிப்பிட்ட சில கூடுதல் Hotel Center சேவைகளைப் பயணக் கூட்டாளர் பயன்படுத்த விரும்பினால் அந்தச் சேவைகளுக்கான தனிப்பட்ட விதிமுறைகளை அவர் ஒப்புக்கொள்ள வேண்டியதிருக்கலாம்.  சில Hotel Center சேவைகள் “பீட்டா” என்றோ ஆதரிக்கப்படாதவை/ரகசியமானவை என்றோ (“பீட்டா அம்சங்கள்”) குறிப்பிடப்பட்டிருக்கும். பீட்டா அம்சங்களில் உள்ள தகவல்களையோ அந்த அம்சங்களைப் பற்றிய தகவல்களையோ அல்லது பொதுவில் வெளியிடப்படாத பீட்டா அம்சங்கள் குறித்தோ அவற்றின் விதிமுறைகளையோ பயணக் கூட்டாளர் வெளியிடக்கூடாது.  பீட்டா அம்சங்கள் உட்பட எல்லாச் சேவைகளையும் Googleளும் அதன் இணை நிறுவனங்களும் எப்போது வேண்டுமானாலும் இடைநிறுத்தலாம், மாற்றலாம் அல்லது முற்றிலுமாக நிறுத்தலாம்.  இந்த விதிமுறைகளின் நோக்கங்களுக்காக, Googleளால் நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டுப்படுத்தப்படுகின்ற, அதனைக் கட்டுப்படுத்துகின்ற அல்லது அவ்வப்போது அதன் பொதுவான கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் தரப்பே “இணை நிறுவனம்” ஆகும்.

 

2. கணக்கு.  பயணக் கூட்டாளரின் Hotel Center உபயோகம், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளைப் பயனர் உருவாக்கி அவற்றை Google அனுமதிப்பதற்கு உட்பட்டதாகும்.  கணக்குகளைச் சரிபார்ப்பதற்காக நிறுவனத்தின் சட்டப்பூர்வப் பெயர், பிசினஸ் வழங்கும் சேவைகள், முதன்மைத் தொடர்பு, தொலைபேசி எண், முகவரி, சம்பந்தப்பட்ட டொமைன்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் அவ்வப்போது Googleளுக்குத் தேவைப்படக்கூடும். கணக்குகளுக்கான அனைத்து அணுகல்கள், கணக்குகளின் உபயோகம், கணக்குகளின் மூலம் Hotel Centerருக்குச் சமர்ப்பிக்கப்படும் உள்ளடக்கம், கணக்கின் பயனர் பெயர்களையும் கடவுச்சொற்களையும் பாதுகாத்தல் ஆகியவை உட்பட Hotel Centerரைப் பயன்படுத்துவதற்கான பொறுப்பு பயணக் கூட்டாளரையே சாரும்.

 

3. கொள்கைகள்

a. பயணக் கூட்டாளரின் Hotel Center உபயோகம் இவற்றுக்கு உட்பட்டதாகும்: (i) https://support.google.com/hotelprices/topic/11077677 தளத்தில் உள்ள பொருந்தக்கூடிய Google கொள்கைகள் மற்றும் பயணக் கூட்டாளருக்கு Google வழங்கியுள்ள அனைத்துக் கொள்கைகள் (இவை Googleளால் அவ்வப்போது மாற்றியமைக்கப்படலாம்) (ஒட்டுமொத்தமாக, “கொள்கைகள்”), (ii) இந்த விதிமுறைகள் மற்றும் (iii) பொருந்தக்கூடிய சட்டங்களுடன் பயணக் கூட்டாளர் இணங்கியிருத்தல்.

b. Hotel Center தொடர்பாக, (i) Google தனியுரிமைக் கொள்கையுடன் Google இணங்கும் (இந்தக் கொள்கை google.com/policies/privacy தளத்தில் உள்ளது. இது அவ்வப்போது மாற்றியமைக்கப்படும்) மற்றும் (ii) பொருந்தக்கூடிய வரம்பிற்கு உட்பட்டு, Googleளும் பயணக் கூட்டாளரும் Google கண்ட்ரோலர்-கண்ட்ரோலர் தரவுப் பாதுகாப்பு விதிமுறைகளை ஏற்கின்றனர். (இந்த விதிமுறைகள் https://privacy.google.com/businesses/gdprcontrollerterms/ தளத்தில் (“தரவுப் பாதுகாப்பு விதிமுறைகள்”) வழங்கப்பட்டுள்ளன).   தரவுப் பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் வெளிப்படையாக அனுமதிக்கப்படும் சமயங்கள் தவிர்த்து வேறு எப்போதும் தரவுப் பாதுகாப்பு விதிமுறைகளில் Google மாற்றங்களைச் செய்யாது.

 

4. பயணக் கூட்டாளர் உள்ளடக்கம்.

a. Google மற்றும் அதன் இணை நிறுவனங்களின் தயாரிப்புகள், சேவைகள் ஆகியவை தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான (அறிவுசார் சொத்துரிமை மூலம் பாதுகாக்கப்படும் அளவுக்கு) நிலையான, மாற்றமுடியாத, உலகளாவிய, கட்டணமற்ற உரிமத்தை Google மற்றும் அதன் இணை நிறுவனங்களுக்குப் பயணக் கூட்டாளர் வழங்குகிறார். Googleளும் அதன் இணை நிறுவனங்களும் அவர்களுக்குச் சேவைகளை வழங்குகின்ற ஒப்பந்ததாரர்களுக்கும் அவர்களின் பயனர்களுக்கும் இந்த உரிமைகளுக்கான துணை உரிமத்தை வழங்க பயணக் கூட்டாளர் ஒப்புக்கொள்கிறார். இதன் மூலம் Google மற்றும் அதன் இணை நிறுவனங்களின் தயாரிப்புகளையும் சேவைகளையும் அவர்கள் பயன்படுத்தும்போது தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பயன்படுத்தலாம்.

b. பயணக் கூட்டாளர் சமர்ப்பிக்கும் உள்ளடக்கத்தில் URLகளோ ஒரே மாதிரியான உள்ளடக்கமோ இருந்தால் அத்தகைய URLகளையும் (“இணையப் பக்கங்கள்”) URLகள் மூலம் கிடைக்கும் உள்ளடக்கத்தையும் Google மற்றும் அதன் இணை நிறுவனங்கள் அணுகுவதற்கும், அட்டவணைப்படுத்துவதற்கும், தற்காலிக நினைவகத்தில் சேமிப்பதற்கும், கிரால் செய்வதற்கும் பயணக் கூட்டாளர் அனுமதிக்கிறார்.  உதாரணத்திற்கு, அத்தகைய URLகளுடன் தொடர்புடைய இணையதளங்களை மீட்டெடுக்கவும் பகுப்பாய்வு செய்யவும் ஒரு தானியங்கு மென்பொருள் நிரலை Google பயன்படுத்தலாம்.  Google அல்லது அதன் இணை நிறுவனங்களால் இணையப் பக்கங்களில் இருந்து சேகரிக்கப்படும் உள்ளடக்கம் அனைத்தும் உள்ளடக்கமாகவே கருதப்பட்டு, இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு கையாளப்படும் என்று பயணக் கூட்டாளர் ஒப்புக்கொள்கிறார்.

c. Hotel Centerரைப் பயன்படுத்துவதன் மூலம், உள்ளடக்கத்தைப் பயன்படுத்த Googleளுக்கு இருக்கும் அங்கீகாரத்தின்படி இவற்றைப் பயன்படுத்த Googleளுக்குப் பயணக் கூட்டாளர் அங்கீகாரம் அளிக்கிறார்: வர்த்தக முத்திரைகள், சேவை முத்திரைகள், வர்த்தகப் பெயர்கள், உரிமையைப் பிரதிநிதித்துவம் செய்யும் லோகோக்கள், டொமைன் பெயர்கள் மற்றும் பிற ஆதார/பிசினஸ் அடையாளங்காட்டிகள்.

 

5. சோதனை செய்தல்.  Googleளும் அதன் இணை நிறுவனங்களும் இவற்றைச் செய்ய பயணக் கூட்டாளர் அங்கீகாரம் அளிக்கிறார்: (a) பயணக் கூட்டாளருக்கு முன்னறிவிப்பை வழங்காமல் அவ்வப்போது சோதனைகளைச் செய்தல். இது சேவைகளை (இணையப் பக்கங்கள், தரம், ரேங்கிங், செயல்திறன், வடிவமைத்தல், பிற சரிசெய்தல்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையவை உட்பட) பயணக் கூட்டாளர் பயன்படுத்துவதைப் பாதிக்கக்கூடும், (b) இணையப் பக்கங்களைத் தானியங்கு முறையில் மீட்டெடுத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் அவற்றை அணுகுவதற்கான சோதனை அனுமதிச் சான்றுகளை உருவாக்குதல்.

 

6. உத்திரவாதம், உரிமைகள் மற்றும் கட்டாயங்கள்.  பயணக் கூட்டாளர் பின்வருபவற்றுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு உத்திரவாதம் அளிக்கிறார்: (a) இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான முழு அதிகாரமும் அங்கீகாரமும் உள்ளது, (b) பிரிவு 4ல் குறிப்பிடப்பட்டுள்ள உரிமங்களையும் அனுமதிகளையும் வழங்குவதற்கான உரிமைகள் உள்ளது, அவை தொடர்ந்து பராமரிக்கப்படும், (c) கொள்கைகள், பொருந்தக்கூடிய சட்டம்/பொருந்தக்கூடிய தனியுரிமைக் கொள்கைகள், மூன்றாம் தரப்பு அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றை மீறும் எந்தவொரு உள்ளடக்கமும் வழங்கப்படாது, (d) பொருந்தக்கூடிய தரவுத் தனியுரிமை அல்லது தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள்/ஒழுங்குமுறைகளின் கீழ் பாதுகாக்கப்படுகின்ற, தனிநபர் குறித்த தகவல்களையோ தனிநபரிடம் இருந்து சேகரிக்கப்படும் தகவல்களையோ Googleளுக்கு வழங்கத் தேவையான அனைத்து உரிமைகளும் ஒப்புதல்களும் உள்ளன, (e) வழங்கியுள்ள தகவல்களும் அங்கீகாரங்களும் (பயணக் கூட்டாளரின் சலுகைகளைக் காட்டத் தேவையான, தயாரிப்பு தொடர்பான அனைத்து வெளியிடுதல்கள் உட்பட) முழுமையாகவும் சரியாகவும் தற்போதையதாகவும் இருப்பதுடன், இனியும் அப்படியே இருக்கும்.

 

7. பொறுப்புதுறப்புகள்.  சட்டத்தால் அனுமதிக்கப்படும் முழு வரம்பிற்கு உட்பட்டு GOOGLEளும் அதன் இணை நிறுவனங்களும்  மீறலில்லாமை, திருப்திகரமான தரம், வணிகத்தன்மை, ஏதேனும் தேவைக்குப் பொருந்தும்தன்மை ஆகியவற்றுக்கான உத்திரவாதங்களையும் (மறைமுகமானவை, சட்டப்பூர்வமானவை, மற்றவை) வர்த்தகரீதியிலான கையாளுதல்/உபயோகத்தின்போது எழும் உத்திரவாதங்களையும் பொறுப்பு துறக்கின்றன.  சட்டத்தால் அனுமதிக்கப்படும் முழு வரம்பிற்கு உட்பட்டு, HOTEL CENTERரும் அது சம்பந்தமான சேவைகளும் "உள்ளபடியே", "கிடைக்கும்படியே" மற்றும் "அனைத்து குறைகளுடனே" வழங்கப்படுகின்றன, வணிகர் தனது சொந்த விருப்பத்தின்படி அவற்றைப் பயன்படுத்துகிறார். HOTEL CENTER மற்றும் அது சம்பந்தமான சேவைகள் தொடர்பாகவோ அவை வழங்கும் முடிவுகள் தொடர்பாகவோ GOOGLEளும் அதன் இணை நிறுவனங்களும் எந்தவொரு உத்திரவாதமும் வழங்குவதில்லை. குறைபாடுகள் அல்லது பிழைகள் குறித்து வணிகருக்குத் தெரிவிப்பதாக GOOGLEளும் அதன் இணை நிறுவனங்களும் எந்த வாக்குறுதியும் வழங்குவதில்லை.

 

8. பொறுப்பிற்கான வரம்பு.  உரிமைகோரலின் கோட்பாடு, வகை ஆகியவை எதுவாக இருந்தாலும் சட்டத்தால் அனுமதிக்கப்படும் முழு வரம்பிற்கு உட்பட்டு (A) GOOGLEளும் அதன் இணை நிறுவனங்களும் இந்த விதிமுறைகளின் கீழ் அல்லது இந்த விதிமுறைகளின் செயல்பாடு விளைவாக அல்லது தொடர்பாக ஏற்படும் நேரடிச் சேதங்கள் தவிர்த்து வேறு எந்தச் சேதங்களுக்கும் பொறுப்பேற்காது. இதுபோன்ற பிற வகையான சேதங்கள் ஏற்படுவது சாத்தியம் என GOOGLE அல்லது அதன் இணை நிறுவனங்களில் ஒன்று அறிந்திருந்தாலும், அறிந்திருக்க வேண்டுமென்றாலும், நேரடிச் சேதங்கள் நிவாரணத்திற்குத் தகுதியானவையல்ல என்றாலும் இது பொருந்தும்; (B) இந்த விதிமுறைகளின் கீழ் அல்லது இந்த விதிமுறைகளின் செயல்பாடு விளைவாக அல்லது தொடர்பாக ஏற்படும் எந்தவொரு நிகழ்வு/தொடர்புடைய நிகழ்வுகளுக்கான நஷ்ட ஈடாக GOOGLEளும் அதன் இணை நிறுவனங்களும் மொத்தமாக USD $5,000.00 க்கு மேல் பொறுப்பேற்காது.

 

9. நஷ்ட ஈடு செலுத்துதல்.  பொருந்தக்கூடிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளபடி, அனைத்துப் பொறுப்புகள், சேதங்கள், இழப்புகள், செலவுகள், கட்டணங்கள் (சட்டக் கட்டணங்கள் உட்பட) ஆகியவற்றில் இருந்தும், பயணக் கூட்டாளரின் உள்ளடக்கம், இணையப் பக்கங்கள், Hotel Center & அது சம்பந்தமான சேவைகளின் பயன்பாடு ஆகியவற்றுக்காகவோ தொடர்புடைய காரணங்களுக்காகவோ பயணக் கூட்டாளர் இந்த விதிமுறைகளை மீறியதற்காகவோ எடுக்கப்படும் மூன்றாம் தரப்புச் சட்ட நடவடிக்கை தொடர்பான செலவுகளில் இருந்தும் Google, அதன் இணை நிறுவனங்கள், முகவர்கள், உரிமதாரர்கள் ஆகியோரைப் பயணக் கூட்டாளர் பாதுகாப்பதுடன் நஷ்ட ஈடு செலுத்தவும் இழப்புகளுக்கு ஈடுகட்டவும் ஒப்புக்கொள்கிறார்..

 

10. முடித்தல்.  Hotel Center, சேவைகள் மற்றும் கணக்குகளுக்கான பயணக் கூட்டாளரின் அணுகலையோ உபயோகத்தையோ பின்வரும் காரணங்களுக்காகக் கட்டுப்படுத்தவோ இடைநிறுத்தவோ முடித்து வைக்கவோ (முழுமையாக/பகுதியளவில்) Googleளுக்கு முழு அதிகாரம் உள்ளது: (a) இந்த விதிமுறைகள், ஏதேனும் கொள்கைகள் அல்லது பொருந்தக்கூடிய சட்டங்களைப் பயணக் கூட்டாளர் மீறியுள்ளார், (b) சட்டத் தேவை அல்லது நீதிமன்ற உத்தரவுக்கு இணங்குவதற்காக Google அவ்வாறு செய்யவேண்டியுள்ளது அல்லது (c) வேறொரு பயணக் கூட்டாளர், மூன்றாம் தரப்பு அல்லது Googleளுக்குப் பயணக் கூட்டாளரின் நடத்தை தீங்கு விளைவிக்கிறது அல்லது பொறுப்பை ஏற்படுத்துகிறது என்று Google தகுந்த காரணங்களோடு கருதுகிறது. Hotel Center, சேவைகள் மற்றும் கணக்குகளுக்கான அணுகல் தவறுதலாகத் தடைசெய்யப்பட்டதாகவோ இடைநிறுத்தப்பட்டதாகவோ முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாகவோ பயணக் கூட்டாளர் கருதினால் எங்கள் கொள்கைகளில் கொடுக்கப்பட்டுள்ள மறுபரிசீலனைச் செயல்முறையைப் பார்க்கலாம். பயணக் கூட்டாளர், கணக்குகளை முடித்துவிட்டு Hotel Centerரைப் பயன்படுத்துவதை நிறுத்துவதன் மூலம் இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம்.

 

11. விதிமுறைகள் தொடர்பான மாற்றங்கள்.  இந்த விதிமுறைகளுடன் தொடர்பற்ற மாற்றங்களை எப்போது வேண்டுமானாலும் Google முன்னறிவிப்பின்றிச் செய்யலாம். ஆனால் இந்த விதிமுறைகள் தொடர்பாக மாற்றங்கள் செய்யப்பட்டால் அதற்கான அறிவிப்பை Google முன்கூட்டியே வழங்கும். விதிமுறைகளில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் கடந்த காலத்திற்குப் பொருந்தாது, இந்தப் பக்கத்தில் இடுகையிட்ட 7 நாட்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும். இருப்பினும், சட்டப்பூர்வக் காரணங்களுக்காக அல்லது அவசரச் சூழ்நிலைகளில் (தொடர்ந்து நடக்கும் துஷ்பிரயோகத்தைத் தடுப்பது போன்றவை) செய்யப்படும் மாற்றங்கள் அறிவித்த உடனே அமலுக்கு வரும்.

 

12. நிர்வகிக்கும் சட்டம்; வழக்குத் தீர்வுகள். இந்த விதிமுறைகள் அல்லது Hotel Center இல் இருந்து எழும் அல்லது இவை தொடர்புடைய அனைத்து உரிமைகோரல்களும் கலிஃபோர்னியா சட்டத்தின்படி நிர்வகிக்கப்படும் (கலிஃபோர்னியாவின் சட்ட முரண்பாட்டு விதி தவிர்த்து). அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டா க்ளாரா கவுண்ட்டியின் அதிகார எல்லைக்குள் இருக்கும் ஃபெடரல் அல்லது மாநில நீதிமன்றங்களில் பிரத்தியேகமாக வழக்காடப்படும். இந்த நீதிமன்றங்களின் தனிப்பட்ட அதிகார எல்லைக்கு உட்படுவதாகத் தரப்பினர் ஒப்புதல் அளிக்கின்றனர்.  பொருந்தக்கூடிய சட்ட எல்லையில் பயணக் கூட்டாளர் இருந்தால், இந்த விதிமுறைகள் அல்லது Hotel Center தொடர்பாக எழும் Google உடனான வழக்கை மத்தியஸ்தம் மூலம் தீர்ப்பதற்கும் பயணக் கூட்டாளர் விண்ணப்பிக்கலாம். நாங்கள் ஈடுபடத் தயாராக இருக்கும் மத்தியஸ்தர்களைப் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் மத்தியஸ்தம் கோருவது எப்படி என்பதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம். மத்தியஸ்தம் என்பது தன்னார்வச் செயலாகும். பயணக் கூட்டாளரோ Googleளோ மத்தியஸ்தம் செய்து வழக்குகளைத் தீர்க்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. பொருந்தக்கூடிய சட்டத்தின்படி அவசியமென்றால் மட்டும் மத்தியஸ்தம் செய்து வழக்குகளைத் தீர்க்கலாம்.

 

13. மற்றவை. (a) இந்த விதிமுறைகள், தரப்பினரின் மேற்கூறப்பட்ட விஷயங்கள் தொடர்பான முழு உடன்படிக்கையாகும். மேலும், இது தொடர்பான முந்தைய அல்லது தற்போதைய பிற ஒப்பந்தங்களையும் மீறி இந்த விதிமுறைகள் அமலாகும். பயணக் கூட்டாளர் இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொண்ட பிறகு Hotel Centerரில் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளடக்கத்திற்காக Google மற்றும் பயணக் கூட்டாளர் இடையிலான உள்ளடக்க உரிம ஒப்பந்தங்களும் இதில் அடங்கும். (b) பயணக் கூட்டாளர் இந்த விதிமுறைகளால் கருதப்படும் தொடர்பைப் பற்றிப் பொது அறிக்கை எதையும் (சட்டத்தின்படி அவசியமென்றால் தவிர) வெளியிடக்கூடாது. (c) பிரிவு 11ன் கீழ் விதிமுறைகளில் Google மேற்கொள்ளும் மாற்றங்களைத் தவிர, இந்த விதிமுறைகளில் மேற்கொள்ளப்படும் எந்தத் திருத்தமும் இரு தரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் மற்றும் இந்த விதிமுறைகளைத் திருத்துவது குறித்து வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டும். (d) முடித்தல் அல்லது விதிமீறல் பற்றிய அனைத்து அறிவிப்புகளும் எழுத்துப்பூர்வமாக இருப்பதுடன் எதிர் தரப்பினரின் சட்டத்துறைக்கு (எதிர் தரப்பினருக்குச் சட்டத்துறை இருக்கிறதா என்பது தெரியவில்லை என்றால் ஃபைலில் குறிப்பிடப்பட்டுள்ள அவர்களுடைய முதன்மைத் தொடர்பு அல்லது பிற முகவரிக்கு) அனுப்பப்பட வேண்டும். மின்னஞ்சல்கள் எழுத்துப்பூர்வ அறிவிப்புகளாகக் கருதப்படும். Googleளின் சட்டத்துறைக்கு அனுப்பப்படும் அறிவிப்புகளுக்கான மின்னஞ்சல் முகவரி legal-notices@google.com ஆகும்.  பயணக் கூட்டாளருக்கு அனுப்பப்படும் மற்ற அனைத்து அறிவிப்புகளும் எழுத்துப்பூர்வமாக இருப்பதுடன் பயணக் கூட்டாளரின் கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.  Googleளுக்கு அனுப்பப்படும் மற்ற அனைத்து அறிவிப்புகளும் எழுத்துப்பூர்வமாக இருப்பதுடன் Googleளில் உள்ள பயணக் கூட்டாளரின் முதன்மைத் தொடர்புக்கு அனுப்பப்படும் அல்லது Google குறிப்பிடும் பிற முறையில் அனுப்பப்படும். எழுத்துப்பூர்வமாகவோ மின்னஞ்சல் மூலமோ கிடைக்கப்பெற்றதாக உறுதிசெய்யப்பட்டதும் அறிவிப்பு 'கொடுக்கப்பட்டதாகக்' கருதப்படும். இந்த அறிவிப்புத் தேவைகள் செயல்முறையின் சட்டச் சேவைக்குப் பொருந்தாது, பொருந்தக்கூடிய சட்டத்தால் அவை நிர்வகிக்கப்படுகின்றன. (e) இந்த விதிமுறைகளின் கீழ் எந்தவொரு உரிமையையும் பயன்படுத்தாமல் இருப்பதால் (அல்லது பயன்படுத்துவதைத் தாமதிப்பதால்) எந்தவொரு தரப்பினரும் எந்த உரிமையையும் விட்டுக்கொடுத்ததாகக் கருதப்பட மாட்டாது. (f) இந்த விதிமுறைகளின் ஏதாவதொரு கூற்று செயல்படுத்த முடியாததாகக் கண்டறியப்பட்டால் அது நீக்கப்படும், மற்ற விதிமுறைகள் நடைமுறையிலேயே இருக்கும். (g) Googleளின் எழுத்துப்பூர்வ முன்னனுமதியின்றி இந்த விதிமுறைகளின் கீழுள்ள தனது உரிமைகள் அல்லது கடமைகள் எதையும் பயணக் கூட்டாளர் பிறருக்கு ஒதுக்கக்கூடாது.  (h) இந்த விதிமுறைகளுக்கு மூன்றாம் தரப்புப் பயனாளிகள் யாரும் கிடையாது. (i) இந்த விதிமுறைகள் தரப்புகளுக்கிடையே எந்தவொரு முகமையையோ கூட்டாளர் தொடர்பையோ கூட்டுத்தொழிலையோ பணி சம்பந்தமான தொடர்பையோ உருவாக்காது. (j) பிரிவுகள் 1, 4, 6-10, 12-13 ஆகியவை இந்த விதிமுறைகளின் காலாவதி அல்லது முடிவையும் கடந்து அமலில் இருக்கும். (k) நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளால் ஏற்படும் செயலிழப்புக்கோ செயல்நிறைவேற்றத் தாமதத்திற்கோ எந்தவொரு தரப்பும் அதன் இணை நிறுவனங்களும் பொறுப்பேற்காது.